TERENGGANU, KUALA BERANG-ங்கில் இடைநிலைப்பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் செலுத்திய மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அவ்விருவரும் உயிரிழந்தனர்.
நேற்று மாலை மணி 4.50 அளவில், KAMPUNG GAONG-KUALA PUEH-EMPANGAN JENAGOR சாலையின் 4ஆவது கிலொமீட்டரில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.YAMAHA NVX ரக மோட்டார்சைக்கிளில், பின்னாள் அமர்ந்திருந்த 16 வயது MOHD FARIS MOHD ZULKILFI எனும் மாணவர், தலை மற்றும் உடலில் ஏற்பட்ட கடும் காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேவேளையில், அந்த மோட்டார்சைக்கிளை செலுத்திய 16 வயது MUHAMAD DARWISH EZARIFF MOHD KHAIRUL AZUAN எனும் மற்றொரு மாணவருக்கு தலை, நெஞ்சு உள்பட உடலில் பல பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், HULU TERENGGANU மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அச்சம்பவத்தை உறுதிபடுத்திய HULU TERENGGANU மாவட்ட போலீஸ் தலைவர் DEPUTI SUPERINTENDAN ZAINUL MUJAHIDIN MAT YUDIN, 1987ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ், அந்த விபத்து குறித்து விசாரிக்கப்படுவதாக கூறினார்.








