May 22, 2026
Thisaigal NewsYouTube
சண்டையில் ஒருவர் உயிரிழந்த வேளை, மற்றொருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்
தற்போதைய செய்திகள்

சண்டையில் ஒருவர் உயிரிழந்த வேளை, மற்றொருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்

Share:

Kota Kinabalu, Jalan Bandaraya Berjaya - வில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட சண்டையில் இளைஞன் ஒருவன் உயிரிழந்த வேளை, அவரின் சக தோழர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

இச்சண்டையில் 20 வயது அவ்விளைஞன் Queen Elizabeth மருத்துவமனையில் உயிரிழந்ததுடன் அவரின் சக தோழர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து நள்ளிரவு 2 மணியளவில் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவரிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதாக Kota Kinabalu மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Kasim Muda கூறினார்.

கருத்து வேறுபாடின் காரணமாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு அது சண்டையாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக Kasim Muda அறிவித்தார்.இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News