Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மேலவைத் தலைவரின் டெலிகிராம் கணக்கு ஊடுருவப்பட்டள்ளது
தற்போதைய செய்திகள்

மேலவைத் தலைவரின் டெலிகிராம் கணக்கு ஊடுருவப்பட்டள்ளது

Share:

மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ வான் ஜுனையிடி துவாங்கு ஜாபரின் டெலிகிராம் கணக்கு கடந்த சில நாட்களாகப் பொறுப்பற்ற நபரால் ஊடுருவப்பட்டுள்ளது.

மேல் நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தன்னிடமிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகள், குறிப்பாக நிதி விஷயங்கள் அல்லது சந்திப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களால் பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று வான் ஜுனையிடி நினைவூட்டினார்.

இதுபோன்ற மோசடிகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News