Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ்

Share:

பேரா மாநிலத்தில் செயல்படும் இன்னிசை மையங்களில் சில தமிழ்ப்பாடல்கள் ஒலியேற்றம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுதை மாநில போலீசார் மறுத்துள்ளனர்.

அந்தப் பாடல்ள் குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக அல்லது உந்துதலாக உள்ளன என்று காரணம் கூறி அப்பாடல்கள் இன்னிசை மையங்கள் மற்றும் வர்த்தகத் தளங்களில் ஒரு போதும் ஒலியேற்றக்கூடாது என்று போலீசார் தடை விதித்து இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று பேரா மாநில போலீஸ் தலைவர் முகமது யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

எந்தவொரு வர்த்தகத் தலத்திற்கும் பாடல்களை தடை செய்யக்கோரி எந்த பட்டியலையும் போலீசார் வெளியிட வில்லை என்று அவர் விளக்கினார்.

Related News