May 22, 2026
Thisaigal NewsYouTube
மலையேறி கினாபாலு சிகரத்தில் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மலையேறி கினாபாலு சிகரத்தில் உயிரிழந்தார்

Share:

சபா, கினாபாலு மலையில் மலையேறி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 53 வயது உள்ளூரை சேர்ந்த அந்த மலையேறி, மலை உச்சிக்கு செல்லும் பாதையின் 8.3 ஆவது கிலோமீட்டர் உயரத்திலிருந்து தவறி சரிந்து விழுந்து உயிரிழந்ததாக தெரியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நேற்று காலை 11 மணியளவில் தமது தரப்புக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாக ரனாவ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் சிமியுன் லோமுடின் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்நபர் தனது மனைவி உட்பட ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றுடன் மலை ஏறிய போது இத்துயர சம்பவம் நிகழ்ந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக சிமியுன் லோமுடின் அறிவித்தார்.

Related News