Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்

Share:

ரானாவ்,பிப்.2
ரானாவ், கம்போங் மாத்தான் னில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டியும் அவரின் பேத்தியும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் முழுமையாக தீயை அணைத்தவுடன் 60 வயதுடைய Jafflan Sigal மற்றும் Carla என்று அடையாளம் காணப்படும் 4 வயது சிறுமியின் உடல்கள் ஓர் அறையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது வீட்டில் மற்றொருவரும் இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக அந்நபர் தீயில் பாதிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இத்தீவிபத்தினை குறித்து நேற்று இரவு 10:53 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்து தீயை அணைத்ததாக ரானாவ் தீயணைப்பு, மீட்பு படையின் தலைவர் ரிட்வான் முஹமாட் தாயிப் கூறினார்.

தீயில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிட்வான் முஹமாட் அறிவித்தார்.

Related News