Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தான் முதியவர் கொலை கொள்ளை சம்பவம்: மேலும் ஒரு சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

தெலுக் இந்தான் முதியவர் கொலை கொள்ளை சம்பவம்: மேலும் ஒரு சந்தேக நபர் கைது

Share:

தெலுக் இந்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 69 வயது முதியவர் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

26 வயதுடைய அந்நபர், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி சிலாங்கூர், கிள்ளானில் ஓப் கேசான் நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் சூவா கோக் லியான் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, கடந்த மே 7-ஆம் தேதி குற்றவியல் சட்டம், பிரிவு 302 மற்றும் பிரிவு 34-ன் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர், புதிதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கும் அதே சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய துணை அரசு தரப்பு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள அந்த சந்தேக நபர், செப்டம்பர் 2-ஆம் தேதி தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளார்.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி, தெலுக் இந்தான் பெக்கான் பாருவில் உள்ள வீட்டில் இடம்பெற்ற கும்பல் கொள்ளையின்போது, முதியவர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டதில் உயிரிழந்தார்.

அவரின் வலது கை மற்றும் இடது உள்ளங்கையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி