Sep 2, 2026
Thisaigal NewsYouTube
ஜார்ஜ் டவுனில் பாரம்பரியக் கட்டிடத்தின் சுவர் இடிந்து பெண் காயம்
தற்போதைய செய்திகள்

ஜார்ஜ் டவுனில் பாரம்பரியக் கட்டிடத்தின் சுவர் இடிந்து பெண் காயம்

Share:

பினாங்கு, ஜார்ஜ் டவுன் லெபோ சீனா உள்ள பாரம்பரியக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அதன் கான்கிரீட் துண்டுகள் தாக்கி 20 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்தார்.

நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, கட்டிடச் சுவருடன் இணைக்கப்பட்டிருந்த கேபிள் ஒன்று தளர்ந்ததால், கட்டிடத்தின் மூலையில் இருந்த ஒரு பகுதி பெயர்ந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிதறிய கான்கிரீட் துண்டுகளால் அப்பெண் காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், பினாங்கு தீவு மாநகராட்சி சம்பவ இடத்தில் விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றி, அந்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு தடுப்புகளை அமைத்தது.

கடந்த மாதமும் ஆர்மீனியன் வீதியில் உள்ள பாரம்பரியக் கட்டிடத்தில் இருந்து இடிபாடுகள் விழுந்ததில் இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News