Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பயணிகள் படகு மற்றொரு கப்பலுடன் மோதி விபத்து – 6 பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பயணிகள் படகு மற்றொரு கப்பலுடன் மோதி விபத்து – 6 பேர் படுகாயம்

Share:

பினாங்கில் பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த படகு ஒன்று மற்றொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 92 பேரில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று இரவு 8.40 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், தெலுக் பஹாங் படகானது, எம்.வி. மேகார் ஜெயா என்ற கப்பலுடன் மோதிக்கொண்டதாக பினாங்கு துறைமுக ஆணையமான பி.பி.சி தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மற்ற பயணிகள் சம்பவ இடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

முதற்கட்ட தகவலின்படி, எம்.வி. மேகார் ஜெயா கப்பல் பட்டர்வொர்த் ஆழ்கடல் சரக்குத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு ஸ்வெட்டன்ஹாம் பீயர் பயணிகள் முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக பி.பி.சி தலைவர் யோ சுன் ஹின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமரன் படகு சேவை தொடங்கிய பின்னர், அந்தச் சேவையில் பதிவாகியுள்ள முதல் மோதல் விபத்து இதுவாகும்.

இந்நிலையில், படகு முனையத்தில், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி