Sep 15, 2026
Thisaigal NewsYouTube
குடும்ப எண்கள் கைகொடுத்தன… கோடீஸ்வரரான 66 வயது கார் ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

குடும்ப எண்கள் கைகொடுத்தன… கோடீஸ்வரரான 66 வயது கார் ஓட்டுநர்

Share:

குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய எண்களை வைத்து கடந்த பத்து ஆண்டுகளாக Toto அதிர்ஷ்டக் குலுக்கலில் விளையாடி வந்த 66 வயது தனியார் கார் ஓட்டுநருக்கு, தற்போது 2 கோடியே 39 லட்சத்து 45 ஆயிரத்து 954 ரிங்கிட் 40 சென் பரிசு விழுந்து, அவரை கோடீஸ்வரராக உயர்த்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நெகிரி செம்பிலானில் தனது மகளைச் சந்திக்கச் சென்றிருந்தபோது வாங்கிய சீட்டுக்குத்தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

அவரது வெற்றி எண்களான 3, 5, 6, 10, 20, 42 ஒவ்வொன்றுக்கும் குடும்பத்துடன் தொடர்புடைய சிறப்புக் காரணம் உள்ளது.

3 என்பது அவரது மூன்று பிள்ளைகளையும், 6 என்பது ஆறு பேரக்குழந்தைகளையும் குறிக்கிறது. திருமணமான தேதி அக்டோபர் 20 என்பதால் 10 மற்றும் 20 ஆகிய எண்களையும் தேர்வு செய்துள்ளார். மேலும், 42 என்பது அவர் திருமணம் செய்து 42 ஆண்டுகள் ஆனதை குறிக்கிறது.

குறிப்பாக, ஆறாவது பேரக்குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, வழக்கமாக பயன்படுத்திய 5 என்ற எண்ணுக்குப் பதிலாக 6 என்ற எண்ணை மாற்றியிருந்தார்.

வெற்றி எண்களை இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பார்த்த அவர், அதிர்ச்சியில் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டு, மகளிடம் Toto செயலியில் முடிவைச் சரிபார்க்கச் சொன்னார்.

அந்தப் பரிசுத் தொகையில், குடும்ப உறுப்பினர்களின் நிலுவைக் கடன்களைத் தீர்த்துவிட்டு, மீதியை ஓய்வுக்காக சேமிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்