செப்பாங்,பிப்.6
சமிக்ஞை விளக்கை போடாமல் வளைந்து விட்ட வாகனமோட்டியை கண்டித்ததற்காக முதியவர், முகத்திலேயே கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சிப்பாங், புத்ரா பெர்டானாவில் ஒரு கிளினிக்கிற்கு அருகில் நிகழ்ந்தது. இதில் கடும் காயங்களுக்கு ஆளான 73 வயது முதியவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த வாகனமோட்டியை போலீசார் கைது செய்துள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யுசிஃப் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட முதியவர், புத்ரா பெர்டானாவில் உள்ள தமது நண்பரை பார்ப்பதற்காக கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸிலிருந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கமாருல் அஸ்ரான் குறிப்பிட்டார்.








