Oct 10, 2026
Thisaigal NewsYouTube

குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்காமல் ஆலோசனைக் கட்டணங்களை நீக்க வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்காமல் ஆலோசனைக் கட்டணங்களை நீக்க வேண்டாம்

கோலாலம்பூர், ஜூன்.08-

குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்காமல் ஜிபி எனப்படும் பொது மருத்துவர்களின் ஆலோசனைக் கட்டணங்களை நீக்க வேண்டாம் என்று மலேசிய ஒருங்கிணைந்த மருத்துவ நிபுணர்கள் சங்கம் எம்பிகேம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை தொழில்துறையில் ஆரோக்கியமற்ற போட்டிக்கு வழிவகுக்கும் என்று எம்பிகேம் தலைவர் டாக்டர் சூ தை காங் கூறினார்.

ஆலோசனைக் கட்டணங்களை 50 ரிங்கிட் முதல் 80 ரிங்கிட் வரை நிர்ணயிப்பதையும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை மறுபரிசீலனை செய்வதையும் அச்சங்கம் ஆதரிக்கிறது. தற்போதுள்ள 10 ரிங்கிட் முதல் 35 ரிங்கிட் வரையிலான கட்டணம் கடந்த 33 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது என டாக்டர் சூ தை காங் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →