Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஒவ்வொரு தலைவரும் ஒரு கிராமத்தை தத்தெ‌‌டுக்க வேண்டும், வருகின்ற புதன்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஒவ்வொரு தலைவரும் ஒரு கிராமத்தை தத்தெ‌‌டுக்க வேண்டும், வருகின்ற புதன்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்படும்

Share:

புக்கிட் மெர்தாஜாம், மே 06-

நாட்டில் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நேரடியாக தெரிந்து கொள்வதற்கு பிரதமர் உட்பட ஒவ்வொரு தலைவரும் ஒரு கிராமத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்தார்.

இது தொடர்பாக, வருகின்ற புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் தமது திட்டத்தை முன்வைக்கபோவதாக பிரதம‌ர் அன்வார் தெரிவித்தார்.

இத்திட்டம் அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அரசு தொடர்பான நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக காணப்படும் என்று புக்கிட் மெர்தாஜாம், கெலெரி பெஜுவாங் செரொக் தொக் குன்னில் இன்று நடைபெற்ற ஐடில்ஃபிட்ரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் கூறினார்.

மாவட்ட மற்றும் அரசு அதிகாரிகள் தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து மேற்கொள்வதை தவிர, இந்த திட்டம் கிராம மக்களிடையே எழுகின்ற பிரச்னைகளை கையாள்வதற்கு ஒரு சிறந்த களமாக அமையும் என்று அவர் வலியுறுத்தினார்.

கிராம தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒதுக்கீடுகளை ஒருங்கிணைக்க இந்த முதல் முன்மொழிவு பங்காற்றும் என்று நம்புவதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்