Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இராஜ இராஜேஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு
தற்போதைய செய்திகள்

இராஜ இராஜேஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

Share:

சிரம்பான், மார்ச் 7 -

சிரம்பான், தாமான் துவங்கு ஜாபார் ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீமகா இராஜ இராஜஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்வு, நாளை மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இரவு 7.31 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நான்கு கால சிவ வேள்வி மற்றும் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு செந்தமிழ் திருமறைகளால் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சிவராத்திரி பூஜைகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் நடைபெறவிருக்கின்றன.
.
முதல் சாமம், இரவு 7.31 மணிக்கும், இரண்டாம் சாமம், நள்ளிரவு 11.01 மணிக்கும், மூன்றாம் சாமம், விடியற்காலை 2.01 மணிக்கும், நான்காம் சாமம், அதிகாலை 4.01 மணிக்கும் நடைபெறும்.

*இந்த நான்கு சாமங்களிலும் மூத்த பிள்ளையார், சங்கல்பம் நீர்மலி வருணன் தீர்த்த வழிபாடு,

  • அம்மை அப்பர் திருக்குட வழிபாடு, 108 சங்கு பூஜை, சிவ வேள்வியுடன் நிறையவி நல்கள்,
  • அம்மை அப்பர் நன்னீராட்டு தரிசனம்
  • மற்றும் சிறப்பு பூஜை, 108 போற்றிகள், பன்னிரு திருமுறை விண்ணப்பம், பேரோளி தரிசனம், விபூதி பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

ஆலயத்தின் இந்த சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்விற்கு, அடியார் பெருமக்கள் திரளாக வருகை தந்து இறைவனின் திருவருள் பெற்று இன்புறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர். தொடர்புக்கு : 017-322 5400.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்