Jun 11, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் காகம், புறாக்களைச் சுடும் திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து வழக்கறிஞர்கள் குழு கவலை!
தற்போதைய செய்திகள்

பினாங்கில் காகம், புறாக்களைச் சுடும் திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து வழக்கறிஞர்கள் குழு கவலை!

Share:

பினாங்கு தீவின் பல மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் வரும் ஜூன் 14-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள காகம் மற்றும் புறாக்களைச் சுடும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பினாங்கு தீவு மாநகர்மன்றத்திற்கு விலங்கு உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் குவே, தஞ்சோங் தோக்கோங் மற்றும் தஞ்சோங் புங்கா. போன்ற குடியிருப்புப் பகுதிகளில் பறவைகளைக் கொல்வதற்குத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அக்குழு கவலை தெரிவித்துள்ளது.

மேலும், கழிவு மேலாண்மை மற்றும் இனப்பெருக்கக் கட்டுப்பாடு போன்ற மாற்று வழிகள் மூலம் பறவைகளின் எண்ணிக்கையைத் துப்பாக்கிச் சூடு இல்லாமல் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News