கடந்த வாரம் மோட்டார் சைக்கிளை திருடி வைத்திருந்த குற்றத்திற்காக டெக்னீசியன் ஒருவருக்கு 28 மாத சிறைத்தண்டனை விதிக்க அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
32 வயது முகமது ஃபிக்ரி அமர் என்கிற அந்த டெக்னீசியன் மாஜிஸ்திரேட் சித்தி நோர்ஹிதயா முகமது நூர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் ஓராண்டு முதல் ஏழு ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 379A பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஜூன் 6 ஆம் தேதி நள்ளிரவு 2.20 மணியளவில் கெடா, முகிம் லிம்போங், கம்போங் தெலாகா பாத்து -வில் ஹோண்டா வேவ்ப் ரக மோட்டார் சைக்கிளை திருடியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








