Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இன்று வரை இடியுடன் மழை பெய்யும்
தற்போதைய செய்திகள்

இன்று வரை இடியுடன் மழை பெய்யும்

Share:

கோலலம்பூர், ஜன 29 -

நான்கு மாநிலங்களில் இன்று இரவு 11 மணிவரையில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோலசிலாங்கூர், ஹுலு லங்காட், ஜெலெபு, மெர்சிங் ஆகிய நான்கு பகுதிகளில் கனத்த மழை பெய்யும் என்று மெட்மலேசியா நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதே போன்ற நிலை கூச்சிங், செரியான், சமரஹான் ஆகிய இடங்களிலும் ஏற்படும் என்று நம்பப்படுவதாக மெட்மலேசியா கூறியிருந்தது.

Related News