காய்கறிகள் ஏற்றுமதி செயல்ப்படுத்த முடியாத பட்சத்தால், தானா திங்கி லோஜிங் வட்டாரத்தில் இருக்கின்ற காய்கறி தோட்டங்களில் காய்கறிகள் தேங்கி விட்டதாகவும், அதனால் 500 காய்கறிவியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்துள்ளார். 500 வியாபாரிகளின் பிரச்னைக் குறித்து அமைச்சு தீர்வு காண்பதற்கான வழிகளைத் தேடும் என அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் நிலவாமல் இருப்பதற்காக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் காய்கறிகளின் அளவு மற்றும் உள்நாட்டு ஏற்றுமதி மற்றும் விளைச்சலின் அளவை ஆய்வுக்கு உட்படுத்திய பின் சமசீர் செய்யும் என அவர் மேலும் கூறினார்.








