Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

Share:

மசூதி மற்றும் ஆலயம் போன்ற வழிபாட்டு தலங்கள் தொடர்பான சமய விவகாரங்களை கவனமாகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்று பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாம் மற்றும் இந்து சமுதாயத் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள தகராறுகளில், மேலும் பதற்றத்தை தூண்டாமல் அமைதியான முறையில் அவை கையாளப் பட வேண்டும் என்றும் பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

மலேசியா பல்வேறு இனங்கள் மற்றும் சமயங்களைக் கொண்ட நாடு என்பதால், இன மற்றும் சமயம் சம்பந்தமான பிரச்சினைகளை கையாளும் போது நமது சமூக அமைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சமூகங்களுக்கிடையில் வெறுப்பு, பகைமை மற்றும் அவநம்பிக்கையை உருவாக்க முயற்சிப்பது மிகவும் பொறுப்பற்ற செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவி வரும் பதற்றங்களை தெளிவாகவும் நியாயமாகவும் கையாளுவதில் அதிகாரிகளுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளதாக முன்னாள் சட்ட அமைச்சரான தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு