Mar 17, 2026
Thisaigal NewsYouTube
நகை கடையில் புகுந்து கொள்ளையிட்ட மூவர்
தற்போதைய செய்திகள்

நகை கடையில் புகுந்து கொள்ளையிட்ட மூவர்

Share:

செப்பாங், கோத்தா வாரிசான், பேரங்காடியில் உள்ள நகைக்கடை ஒன்றில் மூவர் புகுந்து நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றனர்.

சந்தேகிக்கும் அந்நபர்கள் தலையில் தலைகவசம் மற்றும் ஜாக்கெட் அணிந்து நகை கடையினுள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை குறித்து Eirul Neirule Akmar என்பவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட காணொளி ஒன்று பலரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் போலீசாரிடமும் புகார் செய்யப்பட்டது.

நேற்று இரவு 8:15 மணியளவில் இச்சம்பவம் நடந்திருப்பதாக செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் காமாருல் அஸ்ரான் வான் யூசோஃப் கூறினார்.

இதில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் இதுக்குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விரைவில் ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்று வான் கமாருல் அறிவித்தார்.

Related News