Oct 21, 2026
Thisaigal NewsYouTube

பெர்லிசில் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகக் கருதப்படும் 16 வயது சிறுமி மீட்பு; இருவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெர்லிசில் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகக் கருதப்படும் 16 வயது சிறுமி மீட்பு; இருவர் கைது

பெர்லிஸ் மாநிலம் ஆராவ் பகுதியில், பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகக் கருதப்படும் 16 வயது சிறுமியை போலீசார் மீட்டதுடன், இது தொடர்பாக இரண்டு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.

இது குறித்து அம்மாநில போலீஸ் தலைவர் ஹம்ஸா ஹாஷிம் கூறுகையில், கிடைத்த தகவல்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில், ஆராவ் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் போலீசார் சோதனை நடத்தி, அச்சிறுமியை மீட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக ஊடகச் செயலி மூலம் விபச்சார நடவடிக்கைகளை விளம்பரப்படுத்தியதுடன், சிறுமியைப் பாலியல் தேவைகளுக்காகச் சுரண்டியதாக, கைது செய்யப்பட்ட இருவர் மீது போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம், மனிதக் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 372 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வேஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் - மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து அன்வார் கவலை!

வேஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் - மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து அன்வார் கவலை!

மாராங் சிறைச்சாலையில் கைதி கொலை: சக கைதி மீது கொலைக் குற்றச்சாட்டு

மாராங் சிறைச்சாலையில் கைதி கொலை: சக கைதி மீது கொலைக் குற்றச்சாட்டு

இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: ஏகேபிஎஸ் தலைவர் விசாரணை கோரினார்

இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: ஏகேபிஎஸ் தலைவர் விசாரணை கோரினார்

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்