கெடா, கூலிமில் இணைய மோசடியில் ஈடுபட்டதாக 49 பேர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்களில் எட்டு மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட எஞ்சியோர் குற்றச்சாட்டை மறுத்தனர்.
அக்டோபர் 9-ஆம் தேதி இரவு 8 மணியளவில் பண்டார் புத்ரா, ஜாலான் லெபோ பண்டார் பகுதியில் உள்ள ஐந்து வளாகங்களில் இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றத்தை ஒப்புக் கொண்ட எட்டு மலேசியர்களுக்கும் தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த வெளிநாட்டினருக்கான வழக்கு விசாரணை நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களில் மூவர், அதே வளாகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத 17 வெளிநாட்டினர் தங்க அனுமதித்ததாகக் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் தனியாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். அந்தக் குற்றச்சாட்டை மறுத்த மூவருக்கும் தலா 8,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.








