Oct 20, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து மூன்று அமைச்சுகள் இணைந்து முடிவெடுக்கும் – ஃபாட்லீனா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து மூன்று அமைச்சுகள் இணைந்து முடிவெடுக்கும் – ஃபாட்லீனா

நாட்டில் நிலவும் புகைமூட்டம் காரணமாகப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு ஆகிய மூன்றும் இணைந்து முடிவெடுக்கும் என்று கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

காற்றுத் தரக் கண்காணிப்பு, மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்ற அவர், பள்ளிகள் நீண்டகாலம் மூடப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மூன்று அமைச்சுகளும் தத்தமது நிபுணத்துவத்தின் அடிப்படையில் நிலைமையை மதிப்பிட்டு முடிவெடுக்கும் என்றும், புகைமூட்டம் நீடிக்காமல் இருக்க வேண்டும் எனத் தாம் நம்புவதாகவும் ஃபாட்லீனா தெரிவித்தார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு பகடிவதைத் தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடினால் நடவடிக்கை! சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை

அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடினால் நடவடிக்கை! சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை

வகுப்பறையில் மூச்சுத் திணறல்; 7 வயது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழப்பு

வகுப்பறையில் மூச்சுத் திணறல்; 7 வயது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழப்பு

பிரான்ஸ், இத்தாலியில் போராட்டங்கள்; மலேசிய மாணவர்கள் காயமின்றி பாதுகாப்பாக உள்ளனர் – ஸம்ரி

பிரான்ஸ், இத்தாலியில் போராட்டங்கள்; மலேசிய மாணவர்கள் காயமின்றி பாதுகாப்பாக உள்ளனர் – ஸம்ரி