Oct 20, 2026
Thisaigal NewsYouTube

வகுப்பறையில் மூச்சுத் திணறல்; 7 வயது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வகுப்பறையில் மூச்சுத் திணறல்; 7 வயது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழப்பு

சிலாங்கூர், டெங்கில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஏழு வயது முதலாம் ஆண்டு மாணவர் நேற்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 7.30 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார். வகுப்பறையில் இருந்தபோது மாணவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவருக்கு ஆரம்பகட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இன்று காலை 8 மணிக்கு புத்ராஜெயா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோர்ஹிஸாம் தெரிவித்தார். மாணவர் உணவு தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்ததாக முன்னதாகத் தகவல்கள் பரவிய நிலையில், அதனை உறுதிப்படுத்தும் தகவல் போலீஸ் அறிக்கையில் இடம் பெறவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து மூன்று அமைச்சுகள் இணைந்து முடிவெடுக்கும் – ஃபாட்லீனா

புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து மூன்று அமைச்சுகள் இணைந்து முடிவெடுக்கும் – ஃபாட்லீனா

அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடினால் நடவடிக்கை! சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை

அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடினால் நடவடிக்கை! சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை

பிரான்ஸ், இத்தாலியில் போராட்டங்கள்; மலேசிய மாணவர்கள் காயமின்றி பாதுகாப்பாக உள்ளனர் – ஸம்ரி

பிரான்ஸ், இத்தாலியில் போராட்டங்கள்; மலேசிய மாணவர்கள் காயமின்றி பாதுகாப்பாக உள்ளனர் – ஸம்ரி