Oct 21, 2026
Thisaigal NewsYouTube

வேஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் - மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து அன்வார் கவலை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் - மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து அன்வார் கவலை!

இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட வேஸ் (Waze) வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்கள் பயணிக்கும் இடங்கள் தொடர்பான தரவுகளின் பாதுகாப்பு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற தேசிய இணையப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், வேஸ் செயலியைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலி இஸ்ரேல் அரசாங்கத்தின் சட்டங்களுக்கு உட்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அதற்குப் பதிலாக, மலேசிய நெடுஞ்சாலை ஆணையமான எல்எெலெம்மால் உருவாக்கப்பட்ட உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவைப் (TuJu) பயன்படுத்துவது குறித்து மலேசியர்கள் பரிசீலிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், மலேசியர்களின் தரவுகள் மற்றும் அடையாளங்களின் பாதுகாப்பில் அரசாங்கம் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாராங் சிறைச்சாலையில் கைதி கொலை: சக கைதி மீது கொலைக் குற்றச்சாட்டு

மாராங் சிறைச்சாலையில் கைதி கொலை: சக கைதி மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்லிசில் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகக் கருதப்படும் 16 வயது சிறுமி மீட்பு; இருவர் கைது

பெர்லிசில் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகக் கருதப்படும் 16 வயது சிறுமி மீட்பு; இருவர் கைது

இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: ஏகேபிஎஸ் தலைவர் விசாரணை கோரினார்

இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: ஏகேபிஎஸ் தலைவர் விசாரணை கோரினார்

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

வேஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் - மலேசியர்களின் பாதுகா... | Thisaigal News