Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஷா  ஆலாம் எல்.ஆர்.டி3 வழித்தடத்தின் இலவச சேவை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

ஷா ஆலாம் எல்.ஆர்.டி3 வழித்தடத்தின் இலவச சேவை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளை இணைக்கும் புதிய ஷா ஆலாம் எல்.ஆர்.டி3 வழித்தடத்தின் இலவச சேவை, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராபிட் கே.எல் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் இந்த புதிய பொதுப் போக்குவரத்து முறையைப் பழகிக் கொள்ளவும், அவர்களின் தினசரி பயணச் செலவைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையின் கீழ், எல்.ஆர்.டி3 ரயில்கள் மட்டுமின்றி, அதனுடன் இணைக்கப்பட்ட ஃபீடர் பேருந்துகள் மற்றும் நிலையங்களில் உள்ள ‘பார்க் அண்ட் ரைடு’ வாகன நிறுத்த வசதிகளையும் பொதுமக்கள் முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்னதாக, கடந்த ஜூன் 28 அன்று இந்த எல்.ஆர்.டி3 வழித்தடத்தைத் திறந்து வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜூன் 29 முதல் ஜூலை 31 வரை ஒரு மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது அந்தச் சலுகை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related News

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்