Sep 23, 2026
Thisaigal NewsYouTube
அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

Share:

ஏர்ஆசியா நிறுவனத்திற்கு அரசாங்கம் உதவி வழங்க முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஏர்ஆசியாவுக்கு அரசாங்கம் சார்பில் நிதி மீட்பு நடவடிக்கை வழங்குவது குறித்து இதுவரை எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோவிட்-19 காலத்தில் அரசு உதவியின்றி நிறுவனம் செயல்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மேற்கு ஆசிய போர் காரணமாக, தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் விலையால், ஏர் ஆசியா புதிய அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நிதி மீட்பு நடவடிக்கைக்கும், நிறுவனத்திற்கு வழங்கப்படும் பிற வகையான உதவிகளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே, ஏர்ஆசியா இரண்டாவது காலாண்டில் 831 மில்லியன் ரிங்கிட் நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. அதிக எரிபொருள் செலவு மற்றும் அந்நியச் செலாவணி இழப்புகள் இதற்கு காரணமாக இருந்த நிலையில், ஏற்கனவே உள்ள கடன்களை மறுநிதியளிக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நிதிச்சுமையை குறைக்க அதிக எரிபொருள் பயன்படுத்தும் விமானங்களை திருப்பி அனுப்புதல், லாபமில்லாத வழித்தடங்களை நிறுத்துதல் மற்றும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் விரிவாக்கத்தை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், மலேசியா ஏர்போர்ட்ஸ் மற்றும் பெட்ரோனாஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியுடன் செலவுகளை குறைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News