வாகனங்களை மோதிய தள்ளிய நிலையில், இரு ஆடவர்கள், போதையில் கண் விழிக்க முடியாமல் காருக்குள்ளேய அமர்ந்திருந்திருந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Beh Heng Lai தெரிவித்தார்.
கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, 5 ஆவது மைல் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் கார் ஓட்டுநரும், அருகில் அமர்ந்திருந்த பயணியும் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.
மதியம் 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அவர்களின் கார் ஒரு லோரியையும், ஒரு காரையும் மோதி தள்ளியது. இதில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்ததாக பே எங் லாய் தெரிவித்தார்.
25 வயதுடைய கார் ஓட்டுநர், பயணியும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.








