May 22, 2026
Thisaigal NewsYouTube
12 வயது இந்திய சிறுமியை காணவில்லை
தற்போதைய செய்திகள்

12 வயது இந்திய சிறுமியை காணவில்லை

Share:

ஜொகூர், மே 24-

கடந்த மே 20 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக கூறப்படும் ஓர் இந்திய சிறுமியை தேடி கண்டுப்பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.

ஜொகூர், மூவார், பஞ்சோர், தாமான் பகோ ஜெயா -வை சேர்ந்த 12 வயது திரியாஷினி முரளி கிருஷ்ணா என்கிற அச்சிறுமி காணாததை குறித்து போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்கப் பெற்றதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.

அந்த சிறுமியை பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடத்தைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் இன்ஸ்பெக்டர் ஏமி இங் ஹெங் ஷி -யை 016-6870718 என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு ரைஸ் முக்லிஸ் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

Related News