மலாக்கா, மெர்லிமாவ்-வில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் பணிப்பெண்ணிடம் ஆபாச சேட்டை புரிந்ததாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 19 வயது பாதிக்கப்பட்ட அப்பணிப்பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, இன்று அதிகாலை 3.15 மணியளவில் 29 வயதுடைய அந்த மருத்துவர் மெர்லிமாவ் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர், துணை கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மருத்துவரும் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணும் கிளினிக்கில் உரையாடலில் ஈடுபட்டிருந்த வேளை, அவர் இந்த வக்கீர செயலை புரிந்தது விசாரணையில் தெரியவந்ததாக அஹ்மத் ஜமீல் கூறினார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட மருத்துவரை சனிக்கிழமை வரையில் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தகவலளித்தார்.








