May 22, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை தகர்த்த போவதாக மிரட்டிய நபர் தடுப்பு காவலில் இரண்டு நாள் நீடிப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டை தகர்த்த போவதாக மிரட்டிய நபர் தடுப்பு காவலில் இரண்டு நாள் நீடிப்பு

Share:

பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனது தாயாரை பிணைப்பிடித்து, வீட்டை தகர்த்தப்போவதாக மிரட்டிய நபர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைப்பதற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டப்பட்ட 41 வயது மதிக்கத்தக்க நபருக்கு எதிரான விண்ணப்பம் மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து இந்த நீடிப்பு செய்யப்பட்டிருப்பதாக Timur Laut காவல்துறையின் துணை அதிகாரி Superintendan Lee Swee Sake தெரிவித்தார்.

சந்தேகிக்கும் நபர் வருகின்ற பிப்ரவரி 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரையில் தடுப்பு காவலில் இருக்க உத்தரவிட்டிருப்பதாக Lee Swee Sake இன்று கூறினார்.

தனது 65 வயதுடைய தாயை முரட்டுப்பிடியில் வைத்திருந்து காயப்படுத்தியதுடன் எரிவாயு களனிலிருந்து வாயுவை வெளியேற்றப் போவதாக அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ள காரணத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக Lee Swee Sake விவரித்தார்.

Related News

வீட்டை தகர்த்த போவதாக மிரட்டிய நபர் தடுப்பு காவலில் இரண்ட... | Thisaigal News