தான் ஶ்ரீக்குச் சொந்தமான மில்லியன் கணக்கான நிதியைக் கொண்ட வங்கிக் கணக்கை மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் முடக்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல், வாகன விநியோக குத்தகை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஒரு மீது விசாரணை நடத்தப்பட எம் ஏ சி சி அந்த வங்கிக் கணக்குகளை முடக்கியது.
முன்னதாக 70 வயதான தொழிலதிபரின் வீடு மற்றும் நிறுவனத்தில் சோதனை நடத்தி விசாரணைக்கு உதவும் நிதி ஆவணங்களைக் கைப்பற்றி இருந்ததாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
குறிப்பிட்ட அந்த டான் ஸ்ரீயின் கட்டுப்பாட்டில் உள்ள மில்லியன் கணக்கான வெள்ளி மதிப்புள்ள 100 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் நிறுவன வங்கிக் கணக்குகள் குறிப்பிட்ட நபர்களுக்கு பணத்தை பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
அந்தத் தொகையில், பல மில்லியன் வெள்ளி என மதிப்பிடப்பட்ட பல கணக்குகளை எம்ஏசிசி முடக்கியது எனக் கூறப்பட்டு வருகிறது.
எம் ஏ சி சி யின் இந்த நடவடிக்கையை அதன் மூத்த துணை இயக்குநர் ஹிஷாமுடின் ஹாஷிம் உறுதிப்படுத்தினார்.








