Sep 28, 2026
Thisaigal NewsYouTube
 ஹெரோயின்  கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தியதாக 6 ஆடவர்கள் மற்றும் 2 இந்தோனேசியப் பெண்கள் மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.

29 வயது எம். புவனேஸ்வரன், 30 வயது ஆர். கலையரசு, 26 வயது எம். முகிலன், 24 வயது கே. சுரேந்திரன், 30 வயது எஸ். சதீஷ்குமார், 34 வயது லோக் ஜுன் முன் மற்றும் இரண்டு இந்தோனேசியப் பெண்களான 30 வயது ஆனந்தா மற்றும் 38 வயது தேவி ஏகாபுத்ரி கரோகரோ ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டு முதல் 40 ஆ ண்டுகள் வரை சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் எண்மரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், இவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவர்களை காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் மரிஸ்கா காலிசான் உத்தரவிட்டார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்