Jul 10, 2026
Thisaigal NewsYouTube
"என்னை உயர்த்தியது துன் அமீனா தமிழ்ப்பள்ளி: தொகுதி மக்களின் பேராதரவைக் கோருகிறார் வழக்கறிஞர் கார்த்தியாயினி!"
தற்போதைய செய்திகள்

"என்னை உயர்த்தியது துன் அமீனா தமிழ்ப்பள்ளி: தொகுதி மக்களின் பேராதரவைக் கோருகிறார் வழக்கறிஞர் கார்த்தியாயினி!"

Share:

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஒரு வழக்கறிஞரான கார்த்தியாயினி ஜெயபாலன், தம்மை வெற்றி அடைய செய்வது மூலம் தாம் வழங்கக்கூடிய முன்னுரிமைகளில் தமிழ்ப்பள்ளியும் என்றாகும் என்று ஆணித்தரமாக கூறுகிறார். தம்மை இந்த அளவிற்கு உயர்த்தியது தாம் தொடக்கப்பள்ளி கல்விப்பயின்ற துன் அமீனா தமிழ்ப்பள்ளியாகும் என்று அரசியலில் பரந்த அனுபவத்தை கொண்டுள்ள கார்த்தியாயினி குறிப்பட்டார்.

துன் அமீனா தமிழ்ப்பள்ளி, தமது கல்வி வெற்றிக்கு அடித்தளமிட்டது என்பதுடன் மேடை ஏறி பேசும் அளவிற்கு துணிச்சலை தந்தது என்றார். அதுமட்டுமின்றி எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். தேர்வுகளில் தமிழ், தமிழ் இலக்கியத்தில் சிறந்த மதிப்பெண்களை பெற வைத்தது என்று கார்த்தியாயினி பெருமிதத்துடன் விவரித்தார்.

எனவே, தொகுதி மக்கள் அனைவரும் தனக்கு பேராதரவு தந்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொண்டார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்