Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தற்போதைய செய்திகள்

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Share:

கோவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கு எதிராகப் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தங்களின் அனுமதியின்றி தடுப்பூசி செலுத்தியது சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற மனுதாரர்களின் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், நாட்டின் ஒட்டுமொத்த பொதுமக்களையும் அல்லது நாட்டின் சட்ட அமைப்பைப் பெரிய அளவில் பாதிக்கும் விஷயங்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அவசியமானவை என்றும், தடுப்பூசியிலிருந்து விலக்கு பெறுவதற்கான மருத்துவ ஆதாரங்களை மனுதாரர்கள் சமர்ப்பிக்கவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அரசாங்கத்திற்கும் மலாயா பல்கலைக்கழகத்திற்கும் தலா 25,000 ரிங்கிட் வழக்குச் செலவுத் தொகையைச் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டர... | Thisaigal News