Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் வயோதிக தம்பதியர் மரணம்
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் வயோதிக தம்பதியர் மரணம்

Share:

சபா, மே 06-

சபா, ஜாலான் கம்போங் லிங்குங்கானில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டதில் வயோதிக தம்பதியர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 69 வயது மிடின் @ மைடின் சின்ஜா மற்றும் அவரின் மனைவி 65 வயது ஜுராய் இம்ரான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றனர்.

இது தொடர்பாக, கிடைக்க பெற்ற தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், டொயோட்டா அன்சர் ரக கார் ஒன்று பெரோடுவா மைவி காருடன் மோதிய நிலையில் இருப்பதை கண்டதாக சபா, மலேசிய தீயணைப்பு மீட்புப் படையின் செயல்பாட்டு நிலைய அதிகாரி ரிக்கி மோகன் சிங் ராம்டே தெரிவித்தார்.

பெரோடுவா மைவி ரக காரில் பயணித்த பாதிக்கப்பட்ட வயோதிக தம்பதியர் காரில் சிக்கிய நிலையில் இறந்திருப்பது கண்டறியப்பட்டதாக ரிக்கி மோகன் கூறினார்.

மற்றொரு காரில் பயணித்த 69 வயது, 64 வயது கணவன் - மனைவி இருவரும் காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்