Mar 16, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழலை வேரோடு துடைத்தொழிக்க மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் முழு ஆதரவு
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழலை வேரோடு துடைத்தொழிக்க மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் முழு ஆதரவு

Share:

நாட்டைப் பீடித்திருக்கும் லஞ்ச ஊழலை முழுமையாகத் துடைத்தொழிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக அனைத்து அரசியல் தலைவர்களும் அரசு ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மேம்படுத்துவதற்கு முன்மாதிரியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்தித்த பிரதமர், லஞ்ச ஊழல் ஒழிக்கப்பட அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் முழு ஆதரவு வழங்குவதாக மமன்னர் கூறியதை பிரதமர் அன்வார் சுட்டிக் காட்டினார்.

இந்த நாடு அதிகாரத்தையும் அரசாங்க அமைப்பையும் பயன்படுத்தி செல்வத்தை கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்த அனுமதிக்காது என்றும், யாவருக்கும் ஒரு பாடமாக சுட்டிக்காட்டப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

தமது ஒர்ராண்டு ஆட்சிக் காலத்தில் மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம், வருமான வரி வாரியம், நீதித் துறை ஆகியவற்றின் எந்த நடவடிக்கையிலும் தாம் தலையிட்டது இல்லை என அன்வார் மேலும் தெரிவித்தார்.

Related News