பரோய், மே 02-
பரோய், ஜாலான் பரோய்-செனாவாங், சுங்காய் லிங்கி அருகே கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஓர் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் ஆற்றில் நபர் ஒருவரின் உடல் மிதப்பதையும் துர்நாற்றம் வீசுவதையும் கண்டறிந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள், காவல்துறைக்கு இச்சம்பவத்தை குறித்து புகார் அளித்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் முகமட் ஹட்டா சே தின் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட நபரின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பது பரிசோதனை அறிக்கை முடிவுகளில் கண்டறியப்பட்டதாக முகமட் ஹட்டா கூறினார்.
அந்நபர் உடலில் சட்டை எதுவும் அணியாமல், நீண்ட காற்சட்டை அணிந்திருப்பதுடன், இடது மற்றும் வலது கையிலும் மார்பிலும் பச்சை குத்தியிருப்பது தெரியப்பட்டதாக முகமட் ஹட்டா அறிவித்தார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








