May 22, 2026
Thisaigal NewsYouTube
2024 ஆம் ஆண்டு அனைத்துலக சர்வ சமய அமைதி மற்றும் நல்லிணக்க மாநாடு
தற்போதைய செய்திகள்

2024 ஆம் ஆண்டு அனைத்துலக சர்வ சமய அமைதி மற்றும் நல்லிணக்க மாநாடு

Share:

தேசிய ஒற்றுமை அமை‌ச்சக‌ம், மலேசிய பெளத்த மதப் போதகர் சங்கம் மற்றும் மலேசிய Pure Land Amitabha Group ஆகியோர் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டு அனைத்துலக சர்வ சமய அமைதி மற்றும் நல்லிணக்க மாநாடு வெகுச் சிறப்பாக நேற்று நடைபெற்றது.

சமூக வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் இணைந்து ஈடுபடுதல் என்ற கருப்பொருளுடன் சாத்தியமான பிளவுகளை கடந்து, உயர்வதற்கு நல்லிணக்கத்தை பிரதான நோக்கமாக கொண்டது இந்த மாநாடாகும்.

நேற்று, சனிக்கிழமை ஜூன் 8 ஆம் தேதி காலை 9 மணியளவில் மலாக்கா, மலேசிய ஹான் ஆய்வுகள் (MAHANS) - சில் நிகழ்ந்த இந்த மாபெரும் மாநாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் என்று சுமார் 150 பேர் உட்பட பொதும‌க்களு‌ம் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், இம்மாநாட்டில் மத விவகார தொடர்புடைய பிரதமர் துறையின் துணை அமைச்சர் YB செனட்டர் டாக்டர். சுல்கிஃப்லி ஹசன், சமாவின் சாஹிபஸ் டத்தோ வீரா ஹாஜி அப்துல் ஹலிம் பின் தவில், சமாஹாவின் சாஹிபுஸ் டத்தோ உஸ்தாஸ் ஹாஜி புங்சு @ அஜீஸ் பின் ஹெச்ஜே ஜாஃபர்ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இம்மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு பிரமுகராக வருகை புரிந்திருந்தார்.

மலேசியா மடானி - யின் கொள்கையானது நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமை நிறைந்த உலகை உருவாக்குவதற்கான ஒருமைப்பாட்டை கொண்டிருப்பதுடன் மற்ற நாடுகளுக்கு மலேசிய ஒரு முன்உதாரணமாக திகழ்கிறது என்கிறார் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி.

மலேசியாவின் தேசிய அடையாளத்தை முக்கிய ஒரு பங்காக உருவெடுத்து வரும் மலேசியா மடானி - யானது மக்களிடையே வேறுபாடுகள் அகற்றப்பட்டு ஒருவருக்கொருவரிடையே இரக்கம், உள்ளார்ந்த கண்ணியம் மற்றும் இதர மதங்களின் மதிப்பை அங்கீகரிக்கக்கூடியதாகும் என்கிறார் சரஸ்வதி கந்தசாமி.

Related News