May 22, 2026
Thisaigal NewsYouTube
மாற்றியமைக்கப்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மாற்றியமைக்கப்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Share:

Ampang, Bukit Ampang Saujana - வை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மேற்கொண்ட Operasi Samseng Jalanan திடீர் சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்டதற்காக ஐந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் Ampang Jaya மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து புலனா‌ய்வு ம‌ற்று‌ம் அமலாக்கப்பிரிவை சேர்ந்த 12 அதிகாரிகள் மேற்கொண்ட இச்சோதனையில் மோட்டார் சைக்கிள்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நபர்களின் செயல்பாடு கண்டறியப்பட்டதாக Ampang Jaya மாவட்ட துணை போலீஸ் தலைவர் Superintendan Nazruel Ekram Abu Saare கூறினார்.

இதில் 13 பேர் மற்றும் 12 வாகனங்கள் சோதனையிடப்பட்ட வேளை, பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 29 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக Nazruel Ekram விவரித்தார்.

மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் வெளியேற்ற சத்தம், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காலாவதியான மோட்டார் சைக்கிளின் உரிமம், விவரக்குறிப்புகளுக்கு இணங்காத பதிவு எண் போன்ற குற்றச் செயல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக Nazruel Ekram குறிப்பிட்டார்.

Related News