ஜோகூர் மாநில சட்டம்ன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி, மலாய் வாக்காளர்களைப் பயமுறுத்தப் பார்ப்பதாக செமேரா தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், குசான் அபு பக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
"குஸானுக்கு அளிக்கும் வாக்கு, ஜசெக.விற்கு அளிக்கும் வாக்கு" என்று ஓன் ஹாஃபிஸ் பேசியது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார்.
வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய உத்திகள் பயன்படுத்தப்படுவதாக குஸான் குறிப்பிட்டார். ஆனால், ஓன் ஹாஃபிஸ் தனது கருத்து இன ரீதியானது அல்ல என்றும், அது ஜசெக –வின் கொள்கைக்கு எதிரானது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இத்தொகுதியில் குஸான், பாரிசான் நேஷனல் வேட்பாளர் பாரெட் காலிட், மற்றும் பெரிகாதான் நேஷனல் வேட்பாளர் ஒத்மான் கெபோல் ஆகியோரை எதிர்த்து மும்முனைப் போட்டியில் களம் காண்கிறார்.








