Jul 10, 2026
Thisaigal NewsYouTube
செய்தியாளர்கள் மீதான புகார்கள் முதலில் ஊடக நல்லுரையின் பரிசீலனைக்கே செல்லும்: அன்வார் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

செய்தியாளர்கள் மீதான புகார்கள் முதலில் ஊடக நல்லுரையின் பரிசீலனைக்கே செல்லும்: அன்வார் அறிவிப்பு!

Share:

ஊடக அமைப்புகள் மற்றும் செய்தியாளர்களுக்கு எதிராகப் பெறப்படும் புகார்கள் மீது இனி தானியங்கி முறையில் நேரடி விசாரணையோ அல்லது அமலாக்க நடவடிக்கையோ எடுக்கப்படாது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக, அந்தப் புகார்கள் அனைத்தும் முதலில் ஊடக நல்லுரையின் முதல் கட்டப் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும். ஊடகவியலாளர்கள் மீதான நடவடிக்கைகள் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்ய இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவின் தரம் சரிந்ததற்கான காரணங்கள் குறித்துப் பேசிய பிரதமர், சில ஊடக நிறுவனங்கள் மீதான அமலாக்க நடவடிக்கைகள் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவை பத்திரிகை சுதந்திரத்தை முடக்கவோ அல்லது அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒடுக்கவோ எடுக்கப்பட்டவை அல்ல என்று குறிப்பிட்டார். மதம், இனம், அரச நிறுவனம் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், சமூக ஊடகத் தளங்கள் பயனர்களின் புகார்களின் அடிப்படையில் தன்னிச்சையாகப் பதிவுகளை நீக்குவதும் இந்தத் தரவரிசைச் சரிவுக்கு மற்றொரு காரணியாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்