Jul 7, 2026
Thisaigal NewsYouTube
இளையர்களின் வாழ்வாதாரம் காக்க பாலோ தொகுதியில் உள்கட்டமைப்பு மேம்படும்: வேட்பாளர் டாக்டர் ரூபன் வாக்குறுதி
தற்போதைய செய்திகள்

இளையர்களின் வாழ்வாதாரம் காக்க பாலோ தொகுதியில் உள்கட்டமைப்பு மேம்படும்: வேட்பாளர் டாக்டர் ரூபன் வாக்குறுதி

Share:

தாம் ஒரு வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, கடந்த மூன்றரை ஆண்டு காலமாக பாலோ தொகுதியில் ஒரு மருத்துவர் என்ற முறையில் சேவையாற்றி வந்துள்ளதாக ஜோகூர் மாநில தேர்தலில் பாலோ சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் ரூபன் ஆறுமுகம் தெரிவித்தார்.

தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை நன்கு அறிந்து வைத்திருப்பதால், ஒரு சட்டமன்ற உறுப்பினராக தம்மை தேர்வு செய்வது மூலம் தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை தீர்ப்பதில் முதன்மை கவனம் செலுத்தப் போவதாக ஜோகூர் மாநில தேர்தலில் பாலோ சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக டாக்டர் ரூபன் ஆறுமுகம் தெரிவித்தார்.

இப்பகுதியை சேர்ந்த மக்கள் குறிப்பாக, இளைஞர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு சிங்கப்பூரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அத்தகைய இளைஞர்கள். பாலோ தொகுதியிலேயே வேலை செய்வதற்கும், நல்ல வருமானத்தை பெறுவதற்கும் தொகுதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது தமது முதன்மை கடமையாக கொள்ள திட்டமிட்டுள்ளதாக டாக்டர் ரூபன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நாடித் துடிப்பை அறிந்த ஒரு மருத்துவராக, பாலோ தொகுதியின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதே எனது முதல் இலக்கு. நம் வீட்டு இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக சிங்கப்பூர் செல்வதைத் தவிர்த்து, சொந்த மண்ணிலேயே நல்ல வருமானத்துடன் வாழத் தேவையான வேலைவாய்ப்புகளையும், உள்கட்டமைப்பையும் நிச்சயம் உருவாக்குவேன். பாலோ தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் தம்மை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தொகுதி மக்களுக்கு டாக்டர் ரூபன் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related News