அன்பான வாக்காளப் பெருமக்களே! உங்களை பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்து, நலம் பல தந்து, இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவள் தாய். அந்தத் தாயின் மாண்பும் அன்பும் அளவிட முடியாதது; ஈடு இணையற்றது! அத்தகையப் பேரன்பு கொண்ட தாயைப் பாதுகாப்பதும், அவர்தம் நலம் பேணுவதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். அன்னையின் தியாகத்திற்கு நாம் செய்யும் கைம்மாறு அதுவே என்று ஜோகூர் மாநிலத் தேர்தலில் புத்ரி வங்சா சட்டன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் மஸ்லீ மாலிக், தொகுதி வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

"மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற நம் பண்பாட்டின்படி, தாய்க்குப் பின்னரே தந்தை! எனவே, தாயை முதன்மையாகக் கொண்டு போற்றுவோம் டாக்டர் மஸ்லீ மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
நம்மைப் பெற்றெடுத்த தாயைப் போற்றுவது வெறும் கடமையல்ல; அது நமது வாழ்வின் அறம். அன்னையின் அன்பைப் பாதுகாக்கும் உன்னத நோக்கோடு, புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் மாற்றத்தை உருவாக்க தொகுதி மக்கள் தங்கள் ஆதரவைத் தருமாறு டாக்டர் மஸ்லீ மாலிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாயின் பெருமை காப்போம்; நல்வாழ்வு அமைப்போம்!" என்று டாக்டர் மஸ்லீ மாலிக் வலியுறுத்தியுள்ளார்.








