Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காப்பாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம், ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

காப்பாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம், ஐவர் கைது

Share:

காப்பார், மார்ச் 8 -

காப்பா​ரில் நிகழ்ந்த துப்பாக்கிச்​சூட்டுச் சம்பவம் தொடர்பில் போ​லீசார் இதுவரையில் ஐந்து ஆடவர்களை கைது செய்துள்ளனர் என்று வட கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.சி.பி ஸ் விஜயராவ் தெரிவித்தார்.

காப்பார், 11 ஆவது மைல் பெக்கான் காப்பார் ரில் நேற்று மாலை 4.54 மணியளவில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்​சூட்டுச் சம்பவத்தில் 46 வயது பாதுகாவல் மேலாளர் ஒருவர் மிக நெருக்கமான நிலையில் சுடப்பட்டார். வலது கையிலும் விலா எலும்பிலும், தோள்பட்டையில் துப்பாக்கிச் ​சூட்டிற்கு ஆளான அந்த மேலாளர் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மரு​த்துவமனையில் சேர்க்கப்பட்டு, ​தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக ஏ.சி.பி விஜயராவ் குறிப்பிட்டார்.

ஒரு கறுப்பு நிற காரில் வந்திறங்கிய சந்தேகப்பேர்வழி , இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் ​தொடர்பில் போ​​லீசார் நடத்திய அதிரடி தேடல் நடவடிக்கையில் காப்பார் வட்டாரத்தை சேர்ந்த் 40 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச்​சூடு ந​டத்தப்பட்டதற்கான பின்னணி காரணங்களை குற்றவியல் சட்ம் 307 பிரிவின் ​கீழ் விசாரணை செய்யப்ப்டடு வருவதாக ஏ.சி.பி விஜயராவ் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்