Sep 25, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!" – ஜொகூர் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டம்

Share:

வரும் ஜுன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத்தின் ஒரு நாள் சட்டமன்றக் கூட்டத்தொடரை அடுத்து, மாநில சட்டமன்றம் கலைக்கப்படலாம் எனப் பரவி வரும் அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்கூடாய் ஜசெக. சட்டமன்ற உறுப்பினர் மாரினா இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய ஒரு நாள் கூட்டத்தொடர் இதற்கு முன்னரும் நடந்துள்ளது என்றும், இது புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கூட்டமாக இருக்கலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் முழு அதிகாரம் ஜொகூர் சுல்தானிடமே உள்ள நிலையில், தேவையற்ற அரசியல் பதற்றங்களை உருவாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஜொகூர் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும், மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹஃபிஸ் காசி அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிட பாரிசான் நேஷனல் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related News