Sep 25, 2026
Thisaigal NewsYouTube
"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

"சபாவின் 40 சதவீத உரிமை!" – நாளை விளக்கம் அளிக்கப்படும்

Share:

மலேசிய அரசியலமைப்பின் கீழ் சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 40 சதவீத நிதி உரிமை மற்றும் சிறப்பு மானியம் குறித்த தெளிவான விளக்கம் நாளை சபாவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி ம் தெரிவித்துள்ளார்.

பத்துவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

மலேசிய ஒப்பந்தம் 1963 இன் படி, சபாவின் இந்த 40 சதவீத நிதி உரிமையை நடப்பு கூட்டரசு அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இதற்கான புதிய மானிய விகிதம் இந்த ஆண்டே அமல்படுத்தப்பட வேண்டும் என்று சபா ஆளும் கட்சியான கூட்டணி கட்சியான ஜி.ஆர்.எஸ் உறுதியாகக் கூறியுள்ளது.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த உரிமையை மறுத்திருந்த வேளையில், தற்போதைய பிரதமர் அன்வார் தலைமைத்துவத்தின் கீழ் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமை நிலைநாட்டப்படும் என்று சபா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News