Sep 25, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரத்தை நடுங்க வைக்கும் நாட்டின் மனசாட்சி!" – ஊடகங்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அதிகாரத்தை நடுங்க வைக்கும் நாட்டின் மனசாட்சி!" – ஊடகங்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

Share:

எல்லைகளற்ற செய்திப் பரவல் மிகுந்த இந்த நவீன யுகத்தில், ஊடகங்கள் உண்மையை மட்டுமே உரக்கச் சொல்ல வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று மே 29 ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படும் வேளையில், ஊடகங்களின் பங்கு வெறும் செய்திகளை வழங்குவது மட்டுமல்ல; அவை நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இரும்புத் தூணாகச் செயல்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நாட்டின் உண்மையான மனசாட்சியாக, நேர்மையுடனும் துணிச்சலுடனும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News