Jun 9, 2026
Thisaigal NewsYouTube
"சட்டத்திற்கு மேலானவர்கள்  யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்
தற்போதைய செய்திகள்

"சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை!" – மாட்டைச் சுட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.என் ராயர் அதிரடி முழக்கம்

Share:

ஹஜ்ஜுப் பெருநாளின் போது, பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா, மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மந்திரி பெசாரின் இந்த செயலுக்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் இன்று மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதியே ஆக்ரோஷமாக இருந்த மாட்டைச் சுட்டதாக மந்திரி பெசார் கூறியுள்ள நிலையில், வைரலான வீடியோவில் மாடு அமைதியாக நிற்பதே தெளிவாகத் தெரிகிறது என்று ராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமய வழிபாட்டு நிகழ்விற்கு மந்திரி பெசார் ஏன் துப்பாக்கியைக் கொண்டு வந்தார், பொது இடத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்துவது 1960 ஆம் ஆண்டு துப்பாக்சிச் சட்டத்தின் கீழ் கடும் குற்றம் இல்லையா என்று ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மந்திரி பெசார் என்பதால் அவரை போலீஸ் துறை இன்னும் கைது செய்யவில்லையா? என்று சாடியுள்ள ராயர், சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் உடனடியாக அவர் மீது போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related News

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு