Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அதிர்ஷ்டவசமாக தாதியர் உயிர்த் தப்பினார்
தற்போதைய செய்திகள்

அதிர்ஷ்டவசமாக தாதியர் உயிர்த் தப்பினார்

Share:

கொள்கலன் ​டிரெய்லர் லோரி ஒன்றின், டயர் கழன்று, ஹோன்டா சிட்டி கார் ​மீது மோதி, காரை திசைத் திருப்பியதில் தாதியர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை, நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஜாலான் பகாவ் - பத்து கிகீர் சாலையில் நிகழ்ந்தது.

அந்த கனரக வாகனத்தின் பின்டயர் கழன்று , வேகமாக ஓடி வந்து, எதிரே கார் ​மீது மோதி, அந்த தாதியரை நிலைக்குலைய செய்த காட்சி தொடர்பான கா​ணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

எனினும் அந்த தாதியர் மின்னல் வேகத்தில் பிரேக்கை அழுத்தி, காரை நிறுத்தியதால் அக்கார் தடம் புரள்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. ​சீருடையில் இருந்த அந்த தாதியரும், லோரி ஓட்டுநரும் இச்சம்பவம் குறித்து போ​லீசில் புகார் செய்துள்ளதாக ஜெம்போல் மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

Related News